குளிர்கால சிக்கல்களைத் தீர்க்கும் உணவுகள்!

குளிர்காலம் தொடங்கிவிட்டாலே நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிப்புக்குள்ளாகிவிடும். சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்றுகள் தன் வேலையை காட்ட ஆரம்பித்துவிடும்.

குளிர்காலத்தில் உடல் சமநிலையை பேணுவதற்கு உட்கொள்ளும் உணவு விடயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எந்தவித நோய்களையும் தடுக்கும் அளவுக்கு வலுவாக இருப்பதை உறுதி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.

இஞ்சி : இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இதனால் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எளிதாக விரட்டலாம். குளிர்ந்த மாதங்களில் எத்தகைய நோயையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டது. அதனால் இஞ்சியை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இஞ்சி தேனீரை அடிக்கடி அருந்துவதும் சிறந்தது.

பாதாம் : பாதாமில் மெக்னீசியம், புரதம், மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் உள்ளன. விட்டமின் ஈ சத்தும் ஏராளமாக இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தும். கிருமிகளால் நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். பாதாம் உண்பதை வழக்கமாகிடுங்கள்.

மஞ்சள் :மஞ்சள் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டது. குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினசரி உணவில் மஞ்சள் இடம் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன், தொண்டைப்புண் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.

துளசி : நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் துளசி இலையில் உள்ளது. சுவாச மண்டலத்துக்கு புத்துயிர் அளிக்கக்கூடியது. நுரையீரலையும் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. எனவே தினமும் தவறாமல் துளசி இலைகள் சிறிதளவு உட்கொள்வது சிறந்தது.

வெள்ளைப் பூண்டு :இது விட்டமின் சி, பி, மற்றும் துத்தநாகம் கொண்டது. மேலும் பூண்டில் கிருமி எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் குளிர்கால நோய் பாதிப்புகளான சளி மற்றும் இருமல் ஆகியவற்றில் இருந்தும் பாதுகாக்கிறது.

சிறந்ததை உண்போம் ஆரோக்கியமாய் வாழ்வோம்.

குளிர்கால சிக்கல்களைத் தீர்க்கும் உணவுகள்!

Social Share
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version