உள்ளூராட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்களை நடாத்துவதே தேர்தல்கள் திணைக்களத்தின் கடமை எனவும், அதனை செய்வதே தமது பணியாகுமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் மாற்றங்கள் ஏதும் செய்யப்பட்டாலன்றி வேறு காரணங்களுக்காக தேர்தல் பிற்போடப்படாது எனவும், அதுவரை தேர்தல்கள் தொடர்பிலான சகல வேலைகளையும் துரித கதியிலும் நடைபெறுமென சமன் ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.
தேர்தல்களை உரிய நேரத்தில் நடாத்தி நாட்டு மக்களின் இறையாண்மையினை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையென அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தேர்தலை நடாத்துவற்கான 10 பில்லியன் ரூபாய் பணம் தயராக இருப்பதாகவும், அதிலும் பார்க்க குறைந்த செலவில் தேர்தலை நடாத்த தாம் முயற்சித்து வருவதாகவும் கூறியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க மார்ச் 19 ஆம் திகதி தேர்தல் நடைபெறுமெனவும், தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடி 68 இலட்சத்து 56 ஆயிரத்து 629 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
