மொனராகலை பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 600 கஞ்சா செடிகள் அவரது இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டதையடுத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரது இல்லத்தை சோதனையிட்டபோது உலோக ஸ்கேனர் ஒன்றும் மீட்கப்பட்டதாக STF தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் எஸ்.எஸ்.பி மேலதிக விசாரணைக்காக மொனராகலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் பொறுப்பேற்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று மொனராகலை பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.