சுற்றுலாத்துறை, வர்த்தகம் மற்றும் பொருளாதரம், ஆகியன உள்ளடங்கலாக புனித யாத்திரைகள் என சகலவிதங்களிலும் இலங்கை – இந்தியா உறவு மேம்பட இரு நாட்டு மக்களதும் நன்மைக்காக இந்தியா கைகொடுக்குமென இந்தியா உயர் ஸ்தானிகர் கோபால் பால்கே கூறியுள்ளார்.
இந்திய கடனுதவி திட்டத்தினூடாக 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையில் மாகோ தொடக்கம் ஓமந்தை வரையிலான புகையிரத பாதை அபிவிருத்தி செய்யும் பணிகள் நேற்று(08.01) ஆரம்பித்த போதே இந்த கருத்தினை அவர் தெரித்துள்ளார்.
புகையிரத பாதை அபிவிருத்தி திட்டத்துக்கு மேலதிகமாக 180 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையில் குடிநீர் குழாய் திட்டமும் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொருட்களை கொண்டு செல்வதற்கான இரயில் சேவைகளது முக்கியத்துவம் தொடர்பில் சுட்டிக்காட்டிய உயர் ஸ்தானிகர், அதன் மூலமாக பொருளாதார அபிவிருத்தி மேம்படும் எனவும் கூறியுள்ளார். அத்தோடு சூழல் பாதுகாப்பு மிக்க போக்குவரத்து சேவைகளை இலங்கையில் அறிமுகம் செய்யவும் இந்தியா கைகொடுக்குமெனவும் மேலும் அவற் கூறியுள்ளார்.
