வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் தைப்பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின்
மனதை கவர்ந்திருந்தது. ‘வாரிசு’ திரைப்படம் வருகிற ஜனவரி 12ம் திகதி இலங்கையில் திரையிடப்படவுள்ளது.
இந்த நிலையில் வாரிசு படத்தின் தெலுங்கு மொழி வெளியீட்டு திகதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் வரும் 14ம் திகதி ‘வாரசுடு’ திரைப்படம் வெளியாகும் என்ற உத்தியோடபூரவ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தளபதி திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு இது சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.