சபரிமலைக்கு செல்ல விமானநிலையம் வந்தவர் கையில் தோட்டாக்கள்!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு யாத்திரை செல்லவிருந்த ஒருவரின் கைப்பையில் டி-56 தானியங்கி துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

சபரிமலைக்கு செல்வதற்காக கைது செய்யப்பட்ட நபர் உட்பட உள்ளிட்ட யாத்ரீகர்கள் குழு ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது. இவர்களிடம் சோதனையிட்டபோது 20 பேரிடம் 30 கிலோ எடையுள்ள இரும்பு பொருட்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வதற்காக, வத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள அபிலி இரும்புச் சந்தையில் கொள்வனவு செய்ததாக அந்தக் குழுவினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த இரும்புப் பொதியை வைத்திருந்த நபரிடம் இருந்தே டி56 ரக துப்பாக்கி தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சபரிமலைக்கு செல்ல விமானநிலையம் வந்தவர் கையில் தோட்டாக்கள்!

Social Share

Leave a Reply