இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “பதான்”. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார்.
அண்மையில் “பதான்” படத்தின் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு நன்றி தெரிவித்து ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “மிக்க நன்றி நண்பா! இதனால்தான் நீங்க தளபதி.. கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
