இந்தியா அணி அபார வெற்றி

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில் இந்தியா குவாஹத்தியில்  நடைபெற்ற முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா அணி அபார வெற்றியினை தனதாக்கியது.

374 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 306 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக பத்தும் நிசங்க சிறப்பான ஆரம்பத்தை வழங்கிய போதும் மற்றைய வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர். தனஞ்சய டி சில்வா, பத்தும் நிசங்க ஆகியோர் 72 ஓட்டங்களை நான்காவது விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.  பத்தும் நிசங்க 72(80) ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 47(40) ஓட்டங்களையும், தஸூன் ஷாணக்க 108 (89) ஓட்டங்களையும் பெற்றனர்.

தஸூன் ஷாணக்க தனித்து நின்று போராடி தனது இரண்டாவது சதத்தை பெற்றுக்கொண்டார்.

தஸூன் ஷாணக்க தனித்து நின்று போராடி தனது இரண்டாவது சதத்தை பெற்றுக்கொண்டார். ஒன்பதாவது விக்கெட் இணைப்பாட்டமாக கஹூன் ரஜித, தஸூன் சாணக்க ஆகியோர் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

பந்துவீச்சில் உம்ரன் மலிக் 3 விக்கெட்களையும், மொஹமட் சிராஜ் 2 விக்கெட்களையும், யுஷ்வேந்திரா சஹால் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

முன்னதாக துடுப்பாடிய இந்தியா அணி விராத் கோலியின் சதம் மூலமாகவும், ரோஹித் ஷர்மா –  சுப்மன் கில் ஆகியோரின் சிறந்த ஆரம்பம் மூலமாகவும் இந்தியா அணி பலமான ஓட்ட எண்ணிக்கையினை பெற்றது. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான மைதானத்தில் இந்தியா அணி 50 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 373 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ரோஹித் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் இணைந்து  143 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 19.4 ஓவர்களில் பகிர்ந்து கொண்டனர். கில் 70(60) ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சகல இணைப்பாட்டங்களும் சராசரியான ஓட்டங்களை வழங்கியது. ரோஹித் ஷர்மா 83(67) ஓட்டங்களோடு ஆட்டமிழக்க விராத் கோலி மத்திய வரிசை வீரர்களோடு இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார்.

இறுதியில் 113 (87) ஓட்டங்களை அவர் பெற்றுக் கொடுத்தார். இது கோலியின் 45 ஆவது சதமாகும். சச்சினின் கூடுதலான சதங்கள் என்ற சாதனையினை தொட இன்னமும் 4 சத்தங்களே கோலிக்கு தேவை.   இலங்கை அணிக்கெதிராக பெறப்பட்ட கூடுதலான சதங்கள் என்ற சச்சினின் சாதனையினை முறியடித்து 9 சதங்களை  கோலி பெற்றுக்கொண்டார்.

தனது முதற் போட்டியில் விளையாடிய டில்ஷான் மதுசங்க முதல் விக்கெட்டினை கைப்பற்றினார். இருந்தாலும் உபாதை காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். கஸூன் ரஜித 3 விக்கெட்களையும்,  சாமிக்க கருணாரட்ன 2 விக்கெட்களையும், தஸூன் சாணக்க, தனஞ்சய டி சில்வா, சாமிக்க கருணாரட்ன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். 

இந்தியா அணி அபார வெற்றி

Social Share

Leave a Reply