தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி சென்றுள்ள தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்போடு மீண்டும் இணைய விரும்பினால் இணைந்து செயற்படலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின்(டெலோ) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அவரிடம் கேட்ட போது வி மீடியாவுக்கு இதனை தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்போடு பல கட்சிகள் தற்போது இணைந்துள்ளன. நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பாக தொடர்ந்தும் செயற்படுவோம் என கூறிய செல்வம் அடைக்கலநாதன், தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே போட்டியிட போகிறோம் என உறுதி செய்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணைந்துள்ள கட்சிகளோடு தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகம், நாளை(11.01) எந்த சின்னத்தில் போட்டியிடுவது என இறுதி முடிவெடுக்கப்படுமென அவர் கூறினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே தாம் தொடர்ந்து செயற்படுவோம் தமிழீழ மக்கள் விடுதலை கழகம்(புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஏற்கனவே உறுதி செய்துள்ளார்.
தொடர்புடைய செய்தி.
