வருடத்தின் முதல் வாரத்திலேயே அதிக டெங்கு தொற்றாளர்கள் அடையாளம்!

2023ம் ஆண்டின் முதல் வாரத்தில் இலங்கையில் 2,142 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 02ம் திகதிக்கு 07ம் திகதிக்கு இடையிலேயே இந்த எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் கம்பஹா மாவட்டத்தில் 440 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். தரவுகளின் அடிப்படையில் இப்பிரதேசத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், கொழும்பில் 433 பேரும், புத்தளத்தில் 273 பேரும், கல்முனையில் 147 பேரும், யாழ்ப்பாணத்தில் 128 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த 7 நாட்களில் களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

 

வருடத்தின் முதல் வாரத்திலேயே அதிக டெங்கு தொற்றாளர்கள் அடையாளம்!

Social Share

Leave a Reply