குடிபோதையில் வாகனம் செலுத்தும் கனரக வாகன சாரதிகள் – மதிப்பீட்டில் தகவல்!

கனரக வாகன சாரதிகளில் சுமார் 10% வீதமானோர் குடிபோதையில் வாகனங்களை செலுத்துவது கண்டறியப்பட்டுள்ளது, மேலும் சிலர் போதைப்பொருளைப் பயன்படுத்துவதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் (NTMI) தலைவர் வைத்தியர் சவேந்திர கமகே தெரிவித்துள்ளார்.

அவரது மதிப்பீட்டின்படி, கனரக வாகன சாரதிகளில் பெரும்பாலோர் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

கனரக வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பேருந்து ஓட்டுனர்களும் மது போதைக்கு அடிமையானவர்களா என்பதை கண்டறிய சிறுநீர் பரிசோதனை பேர்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் திட்டமான, கனரக வாகன சாரதிகளை பரிசோதிக்கும் முன்னோடித் திட்டம் கடந்த ஆண்டில் நடத்தப்பட்டது, எனினும் அதனை தொடர்வதற்கு தேவையான நிதி போதுமானதாக இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகம (2021) பதவி வகித்த காலத்தில், புதிய சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு எதிர்பார்த்திருந்த சாரதிகளுக்கும், அனுமதிப்பத்திர உரிமம் புதுப்பித்தலின் போதும் மருத்துவப் பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டிருந்தன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

குடிபோதையில் வாகனம் செலுத்தும் கனரக வாகன சாரதிகள் - மதிப்பீட்டில் தகவல்!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version