இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட இரு இராணுவ அதிகாரிகள் மீது கனடா அரசாங்கம் விதித்துள்ள தடையினை நிராகரிப்பதாக இலங்கை வெளியுறவு துறை அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்தோடு இலங்கையில் முன்னெடுக்கும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு இது பங்கம் விளைவிக்கும் செயற்பாடு என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு துறை அமைச்சர் அலி சப்ரி கனடாவின் உதவி உயர்ஸ்தானிகர் டானியல் பூட்டை சந்தித்து கனடா அரசாங்கம் விதித்துள்ள தடை தொடர்பில் கடும் வருத்தத்தை வெளியிட்டுள்ளார். ஒரு தலைப்பட்ச அறிவிப்பாக இது அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் சப்ரி, கனடா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக மேலும் கனேடிய உதவி தூதுவரிடம் அமைச்சர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்தி
