தொழிற்பயிற்சி நிறுவன முகாமையாளர் பொலிஸாரால் சுட்டுக் கொலை.

கொழும்பு, நாரஹேன்பிட்டி தொழில் பயிற்சி நிறுவனத்தின் உதவி முகாமையாளர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் நேற்று(11.01) உயிரிழந்துள்ளார்.

பொலிஸ், போதை தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டிருந்த நபர் தப்பி செல்ல முயற்சித்த வேளையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் இறந்துள்ளார்.

15 கிராம் கெரோயின் போதை பொருளுடன் நேற்று முன் தினம் நாரஹேன்பிட்டி பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதானையில் நடைபெற்ற விசாரணைகளின் போது சந்தேக நபருக்கும், பொலிஸாருக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் போது காயமைடந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறந்தவர் ஹிக்கடுவை பகுதியினை சேர்ந்த 41 வயதானவர் என தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொழிற்பயிற்சி நிறுவன முகாமையாளர் பொலிஸாரால் சுட்டுக் கொலை.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version