அறிவொளி இலவச கல்வி நிலையம், தவே அப்பா உதவி மையம் ஆகியவற்றுடன் வி மீடியா ஊடகம் இணைந்து 150 குடும்பகங்களுக்கான பொங்கல் பானை வழங்கும் நிகழ்வு 14 ஆம் திகதி முல்லைத்தீவில் நடைபெறவுள்ளது.
முல்லைத்தீவு, கைவேலி மற்றும் மூங்கிலாறு ஆகிய பகுதிகளை சேர்ந்த 150 குடும்பங்களுக்கான தலா 4000 ரூபா அளவிலான பொங்கல் பானையுடன் பொங்கலுக்கான பொருட்களும் வழங்கப்படவுள்ளன.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.
இல்லாதவர்களுக்கும், பொங்கலை கொண்டாட முடியாமல் இருக்கின்றவர்களுக்கும் பொங்கலுக்கு முன்னதாக தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி தைப்பொங்கலை அனைத்து தமிழ் மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாட கைகொடுக்குமாறு வி மீடியாவும், அறிவொளி இலவச கல்வி நிலையம், தவே அப்பா உதவி மையம் ஆகிய அமைப்புகளும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
