வவுனியாவில் அபிவிருத்தியினை குறிவைத்து த.வி.கூட்டணி – சபேசன்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அபிவிருத்திகளை நோக்கமாக கொண்டது. உள்ளூராட்சி சபைகள் மூலமே கிராம மட்ட மற்றும் நகர மட்ட அபிவிருத்தி பணிகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறான நிலையில் வவுனியாவின் அபிவிருத்தி பாதையில் உதயசூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலை கூட்டணியோடு இணைந்து பயணிக்க அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக தமிழர் விடுதலை கூட்டணியின் பதில் நிர்வாக செயலாளரும், இளைஞர் அணியின் தலைவரும், வவுனியா மாவாட்ட அமைப்பாளருமான க.சபேசன் அறிவித்துள்ளார்.

இன்று(13.01) தமிழர் விடுதலை கூட்டணி கட்சிக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான விண்ணப்ப படிவங்களை வவுனியா மாவட்ட தேர்தல் செயலகத்தில் பெற்றுக் கொண்டதன் பின்னர் வி மீடியாவுக்கு இதனை தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணி தனியான பாதையில் பயணிக்கும் எனவும், தமிழர் விடுதலை கூட்டணியோடு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க விரும்புபவர்கள் தன்னோடு தொடர்பு கொண்டு இந்த தேர்தலில் போட்டியிட முடியுமெனவும் கூறியுள்ளார்.

வவுனியாவில் அபிவிருத்தியினை குறிவைத்து த.வி.கூட்டணி - சபேசன்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version