காலி வீதி வெலிகம கப்பரதொட பாலத்திற்கு அருகில் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி வீதியில் நடந்துசென்ற தாய் மீதும் மகன் மீதும் மோதியதில் தாய் உயிரிழந்துள்ளார்.
கிரலவெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 68 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கும்போதே தாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிகம பஸ் நிலையத்தில் இருந்து பஸ்ஸில் ஏறிய நான்கு பேருக்கும் பஸ்ஸின் நடத்துனருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது, இதில் பஸ்ஸின் சாரதியையும் தாக்க்கப்பட்டு,வர ஓட்டுநர் இருக்கையில் இருந்து தவறி விழுந்ததால் பஸ் சாலையை விட்டு விலகி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி மற்றும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.