விரலை வெட்டி மோதிரம் திருட்டு!

யாழ்ப்பாணத்தில் கடந்த 15ம் திகதி நபரொருவரின் கைவிரலை துண்டித்து தங்க மோதிரம் திருடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பைச் சேர்ந்த நபர் ஒருவர், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, ​​வீட்டுக்குள் வந்த இரண்டு திருடர்கள் மோதிரம் ஒன்றைக் கழற்றியும், கழற்ற முடியாத நிலையிலிருந்த மற்ற மோதிரத்தை அறுத்தும் திருடிச் சென்றுள்ளனர்.

சுமார் இரண்டரை இலட்சம் ருபாய் பெறுமதியான இரண்டு மோதிரங்கள் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

விரலை வெட்டி மோதிரம் திருட்டு!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version