நாட்டை விட்டு செல்லும்போதும் பணம் செலுத்த வேண்டும்

இலங்கையை விட்டு வெளியேறும் ஒவ்வொரு பயணியும் பணம் செலுத்த வேண்டுமென்ற அறிவிப்பு நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. விமானம் மூலமாகவும், கடல் மார்க்கமாவும் பயணிப்பவர்கள் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும்.

யாழ்ப்பாணம், கொழும்பு, ரத்மலான, மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் ஊடாக பயணிப்பவர்கள் 30 டொலர்களையும், ஏனைய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஊடாக பயணிப்பவர்கள் 60 டொலர்கள் செலுத்த வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு விமான நிலையம் பயணிப்பவர்களுக்கான கட்டணம் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி முதல் இவ்வருடம் மார்ச் 26 ஆம் திகதி வரையும், யாழ் விமான நிலையமூடாக பயணிப்பவர்களுக்கான கட்டணம் ஜனவரி 12 ஆம் திகதி முதல் ஜூலை 11 ஆம் திகதி வரையும், அமுலில் இருக்குமெனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய விமான நிலையங்களுக்கு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் அமுல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு செல்லும்போதும் பணம் செலுத்த வேண்டும்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version