தமிழர் விடுதலை கூட்டணி வேட்பு மனு தாக்கல் செய்தது!

தமிழர் விடுதலை கூட்டணி இன்று (20.01) வவுனியா மாவட்ட செயலகத்தில் காணப்படும் தேர்தல் திணைக்களத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்தது.

தமிழர் விடுதலை கூட்டணியின் நிர்வாக செயலாளர், இளைஞர் அணியின் தலைவர், வவுனியா நிர்வாக பொறுப்பாளர் கணேசநாதன் சபேசன் தலைமையில், உதயசூரியன் சின்னத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாநகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ஆகியவற்றில் தமிழர் விடுதலை கூட்டணி வவுனியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளது.

வவுனியாவை அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்வதே இந்த தேர்தலில் தமது கட்சியின் நோக்கமெனவும், வவுனியாவில் திறமையானவர்களையும் மக்களுக்கு சேவை செய்ய கூடியவர்களை இந்த தேர்தலில் தாம் களமிறக்கியுள்ளதாகவும் ஒன்றித்து செயற்பட காத்திருப்பதாகவும் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் சபேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தமிழர் விடுதலை கூட்டணி வேட்பு மனு தாக்கல் செய்தது!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version