தேர்ஸ்டன் கல்லூரி பேரூந்து விபத்து – 7 பேர் பலி

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலா ஒன்றுக்காக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று நுவரெலியா, ரதெல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் மரணித்துள்ளனர்.

வேனுடன் மோதியதில் பஸ் 50 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் தற்போது நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரதெல்லா ‘கெட்டி’ வீதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த வீதி ஆபத்தானது எனவும், இது பொதுவாக அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

விபத்தில் வேன் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரியவருவதுடன், சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேர்ஸ்டன் கல்லூரி பேரூந்து விபத்து - 7 பேர் பலி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version