இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம், சர்வதேச கா
இலங்கை காற்பந்தின் அங்கத்துவம்பறிபோனது…..
https://vmedianews.com/archives/21720
பந்தாட்ட சம்மேளனத்தினால்(FIFA) நேற்று முதல் (21.01) முதல் காலவரையரையின்றி தடை செய்யப்பட்டுள்ளது.
காற்பந்தாட்ட சம்மேளன தேர்தல் அண்மையில் இடம்பெற்றது. தேர்தல் தொடர்பான முறைப்படுகள் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. அத்தோடு ஏற்கனவே இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்திற்குள் விளையாட்டு துறை அமைச்சரின் தலையீடு காரணமாக இந்த தடை வழங்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன.
சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனத்த்திற்கு உட்பட நாடுகளின் சங்க செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் இருக்க முடியாது என்பது சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனத்தின் விதி முறை. அதனை மீறியுள்ளமையினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பேச்சுக்கள் இடம்பெற்றுகின்றன.
இந்த தடையின் காரணமாக இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனதின் கீழ் உள்ள அணிகள் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றல், கருத்தரங்குகள், அபிவிருத்திப் பயிற்சிகள், கற்கை நெறிகள் என்பவற்றை மேற்கொள்ள முடியாது.
-ரவிநாத்-
