இலங்கைக்கு ஹெலிகாப்டர்களை வழங்கியது இத்தாலி!

மனித கடத்தலுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக இத்தாலிய தூதுவர் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான ஹெலிகாப்டர்களை வழங்க இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜி. மனேலா உறுதியளித்துள்ளார்.

இன்று (25.01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தபோதே இத்தாலிய தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் இரு நாடுகளுக்குமிடையிலான கலாசார நிகழ்ச்சிகளை பரிமாறிக்கொள்வது, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது, முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது மற்றும் இக்கட்டான நேரத்தில் இத்தாலியினால் இலங்கைக்கு வழங்கப்படக்கூடிய ஆதரவு தொடர்பிலும் இந்த சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

 

இலங்கைக்கு ஹெலிகாப்டர்களை வழங்கியது இத்தாலி!
இலங்கைக்கு ஹெலிகாப்டர்களை வழங்கியது இத்தாலி!

Social Share

Leave a Reply