நேற்று இடம்பெற்ற வீதி விபத்துகளால் நான்கு பேர் மரணம்!

நேற்று (25.01) நாட்டில் இடம்பெற்ற மூன்று வீதி விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

பூவரசங்குளம் வீதியில் பயணித்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் சைக்கிளில் பயணித்த 41 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசங்குளம் வீதியில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹொரணை – கொழும்பு வீதி, பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாலியகொட பகுதியில் மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்ததில், அந்த வீதியில் பயணித்த பேருந்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

யக்கமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மரதன்கடவல – வாழச்சேனை வீதியில் ஹபரன மரதன்கடவல நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் பின்னால் சென்றவர் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இருவரும் உயிரிழந்துள்ளனர்.

கணேவல்பொல பிரதேசத்தில் வசிக்கும் 65 மற்றும் 46 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் மொரகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வானங்களை செலுத்தும்போது அதிக அவதானமாக செயற்படுங்கள், உங்கள் பாதுகாப்பிற்கும் உங்களோடு பயணிப்பவர்கள் பாதுகாப்பிற்கும் நீங்களே பொறுப்பு என்பதை மறந்துவிடாதீர்கள். அதிக வேகம் ஆபத்தை தரும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

நேற்று இடம்பெற்ற வீதி விபத்துகளால் நான்கு பேர் மரணம்!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version