சீனா வங்கியின் கடன் காலக்கெடு நீடிப்பு.

சீன இறக்குமதி, ஏற்றுமதி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ள 2.83 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீள செலுத்துவதற்கான கால எல்லையினை இரண்டு வருடங்களுக்கு பின்னதாக நீடித்துள்ளது. இலங்கையின் தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு, இலங்கைக்கு கைகொடுக்கும் முகமாக இந்த கால நீடிப்பை வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ரொய்ட்டேர்ஸ் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் சீன வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை ரொய்ட்டேர்ஸ் செய்தி சேவைக்கு உறுதி செய்துள்ளது. அத்தோடு சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை பெற்றுக் கொளவதற்கும் தாம் உதவ தயாராக இருப்பதாக குறித்த வங்கி மேலும் அறிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதர சிக்கல்களிலிருந்து மீளவும், சவால்களுக்கு முகம் கொடுக்வும் , சமூக- பொருளாதார வளர்ச்சிக்கு சீனா எப்போதும் ஆதரவாக இருக்குமெனவும் சீன வெளியுறவு துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியா, இலங்கைக்கு முழு ஆதரவினை வழங்க தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ள நிலையில் சீனாவின் ஆதரவும் இலங்கைக்கு கடன் கிடைப்பதற்கு முக்கிய பங்காக காணப்படுவதாக ரொய்ட்டேர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் கடைசி பகுதியில் எக்சிம் வங்கி 2.83 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்கியதாக சர்வதேச நாணய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா வங்கியின் கடன் காலக்கெடு நீடிப்பு.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version