வேகமாக அதிகரிக்கும் டெங்கு – மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வருடத்தின் கடந்த சில தினங்களில் மட்டும் 4,387 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், அதில் 1,426 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

தரவுகளின்படி, இம்மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் 741 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 491 டெங்கு நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 194 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

மேலும், புத்தளம், யாழ்ப்பாணம், கண்டி, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை போன்ற பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களத்தின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

காய்ச்சல் ஏற்படும் போது மருத்துவ சிகிச்சை பெறுவதும், தொடர் காய்ச்சல் இருப்பின் மூன்றாவது நாளிலாவது ஆய்வுக்கூட பரிசோதனைகளை செய்து கொள்வதும் மிகவும் அவசியம் என வைத்தியர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வேகமாக அதிகரிக்கும் டெங்கு - மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version