கெல்சி நிறுவனத்தின் தலைவராக துமிலன் அறிவிப்பு

கெல்சி டெவலப்மென்ட் PLC நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக சிவராஜா துமிலன் நேற்று(30.01) அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 25 ஆம் திகதி முதல் அவர் பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கெல்சி டெவலப்மென்ட் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை ரமேஷ் சாப்டர், மற்றும் மறைந்த பிரகாஷ் சாப்டர் ஆகியோரிடமிருந்து ப்ளூ ஒசியன் நிறுவனத்தின் தலைவரான துமிலன் கடந்த நவம்பர் மாதத்தில் 257 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்துகொண்டார்.

ப்ளூ ஒசியன் நிறுவனம் கடந்த பல வருடங்களாக கட்டடங்கள் அமைத்தல், சொகுசு மாடிகள் அமைத்தல், அவற்றை விற்பனை செய்தல் ஆகிய வியாபாரத்தில் முன்னணியில் திகழ்ந்து வருகின்றது.

அந்த நிறுவனம் கொள்வனவு செய்துள்ள கெஸ்லி ஹோம்ஸ் நிறுவனம் 1983 ஆம் ஆண்டு முதல் கெஸ்லி ஹோம்ஸ் லிமிட்டட், கெஸ்லி ஹோம்ஸ் சென்ட்ரல் பார்க் லிமிட்டட் ஆகிய நிறுவனம் மூலமாக ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இனிவரும் காலங்களில் இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து செயற்படவுள்ளன. கெல்சி நிறுவனங்கள் பங்குசந்தை வியாபாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் நஷ்டமடைந்திருந்த நிலையில், இந்த புதிய மாற்றங்கள் காரணமாக மீள ஆரம்பிக்கப்படும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

சிவராஜா துமிலன், வர்த்தக துறை உயர்கல்வி ஆசிரியாராக தனது தொழிற்துறையையினை ஆரம்பித்து அதன் பின்னர் உயர்கல்வி நிறுவனம் ஒன்றை கொழும்பில் இஸ்தாபித்து அதனூடாக பல கிளைகளை நிறுவி கல்வி சேவையினை வழங்கிய அதேவேளை, அதன் பின்னர் ப்ளூ ஒசியன் என்ற நிறுவனத்தினூடாக கட்டட நிர்மானத்துறையில் கால்பதித்து தற்போது மேலும் முன்னோக்கி செல்கிறார்.

கெல்சி நிறுவனத்தின் தலைவராக துமிலன் அறிவிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version