முட்டை இறக்குமதிக்கு யார் தடை – ஜனாதிபதி கேள்வி!

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதியை வழங்காத தரப்பினர் தொடர்பான முழுமையான அறிக்கையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இன்று (31.01) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டைக்கான தேவை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும், நாட்டில் போதிய உற்பத்தி இல்லை என்றால், தட்டுப்பாட்டை சமாளிக்க தேவையான அளவு முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு தேவையான அளவு முட்டைகளை இறக்குமதி செய்ய தடங்கலாக இருக்கும் சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்பான முழுமையான அறிக்கையை அடுத்த வாரம் அமைச்சரவைக்கு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார். என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“உலகில் முட்டையை ஏற்றுமதி செய்யும் நாடுகள் அதிகம் உள்ளன. எனினும் முட்டை ஏற்றுமதியில் இந்தியா முதன்மையானது. உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படும் முட்டைகளை நம் நாட்டில் கொண்டு வர முடியாது என்று யாராவது முடிவு செய்தால், அதற்கான நியாயமான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.” எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முட்டை இறக்குமதிக்கு யார் தடை - ஜனாதிபதி கேள்வி!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version