மகளிர் T20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணி

2023 பெப்ரவரி 10 முதல் 26 வரை தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிர் T20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட மகளிர் அணியை இலங்கை கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.

சாமரி அத்தபத்து தலைமைப் பொறுப்பில் தொடர்கின்றார். கடந்த ஆண்டு மகளிர் ஆசியக் கிண்ணத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்த அணியில் மூன்று மாற்றங்களுடன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷ்மி குணரத்ன மற்றும் அமா காஞ்சனா ஆகியோர் அணியில் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்மி சில்வா மற்றும் மதுஷிகா மெத்தானந்தா ஆகியோர் இடம் பெறவில்லை. ஹாசினி பெரேரா அணியில் உள்வாங்கப்பட்டிருந்த போதிலும் பயிற்சியின் போது அவரது ஒரு விரலில் காயம் ஏற்பட்டதால் போட்டியில் இருந்து விலக்கப்பட்டு அவருக்கு பதிலாக சத்யா சந்தீபனி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த ஐசிசி U19 மகளிர் T20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு தலைமை தாங்கியவிஷ்மி குணரத்னே அணியில் இடம்பெற்றுள்ளார். 44.66 சராசரியில் 134 ரன்களுடன், U19 உலகக் கிண்ணத்தில் இலங்கையின் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

2022 இல் விளையாடிய 21 போட்டிகளில் 11 வெற்றியை பதிவு செய்துள்ள இலங்கை அணி உலகிண்ண போட்டியில் குழு A இல் அவுஸ்திரேலியா, பங்காளாதேஸ், நியுஸிலந்து, தென்னாபிரிக்கா அணிகளுடன் போட்டியிடவுள்ளது.

பெப்ரவரி 10 தனது முதல் போட்டியில் போட்டியை நடத்தும் நாடான தென்னாபிரிக்கா அணியை எதிர்கொள்கின்றது இலங்கை அணி. இதுவரை இடம்பெற்ற T20 உலககிண்ண போட்டிகளில் இலங்கை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதில்லை. இம்முறை சாமரி அத்தபத்து கிண்ணத்தை சுவீகரித்து சாதனை படைப்பாரா என்று பார்க்கலாம்.

-ரவிநாத்-

மகளிர் T20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணி
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply