மியன்மாரின் இராணுவ ஆட்சிக்கு சீனா ஆதரவு!

மியன்மாரின் இராணுவ ஆட்சிக்கு சீனா தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் மியன்மார் இராணுவ ஆட்சி தொடர்பில் அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு காட்டி வரும் நிலையிலேயே சீனா இவ்வாறு செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மியான்மார் இராணுவத் தலைவர்களுக்கு வழங்கப்படும் இராஜதந்திர மற்றும் இராணுவ ஆதரவை சீனா அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

மியான்மரின் இராணுவ ஆட்சியானது அந்நாட்டின் வலுவான அரசியல் பிரமுகரான ஆங் சான் சூகி உட்பட பல சிவில் செயற்பாட்டாளர்களை சிறையில் அடைத்துள்ளதாகவும், இராணுவ ஆட்சி ஆரம்பித்து பெப்ரவரி மாதத்துடன் 02 வருடங்கள் நிறைவு பெறுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

மியன்மாரின் இராணுவ ஆட்சிக்கு சீனா ஆதரவு!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply