நியூசிலாந்தை உருட்டி எடுத்து தொடரை வென்றது இந்தியா

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இன்று (01.02) அஹமபாத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியான 20-20 போட்டியில் இந்தியா அணி அதிரடியான துடுப்பாட்டம் அபாரமான பந்துவீச்சு மூலம் 168 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்த தொடரின் முதலாவது 20-20 போட்டியில் தோல்வியினை சந்தித்திருந்தாலும் அடுத்த 2 போட்டிகளும் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி இந்தியா அணியின் பெரிய வெற்றியாகும்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 234 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷுப்மன் கில் 126(63) ஓட்டங்களையும், ராஹுல் திரிபாத்தி 44(22) ஓட்டங்களையும், ஹார்டிக் பாண்ட்யா 30(17) ஓட்டங்களையும் பெற்றனர். இது ஷுப்மன் கில்லின் முதலாவது சதமாகும். பந்துவீச்சில் மைக்கல் பிரேஸ்வெல், இஷ் சோதி, பிளைர் டிக்னர் டேரில் மிட்சல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது. நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 66 ஓட்டங்களை பெற்றது. இதில் டேரில் மிட்சல் 35(25) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ஹார்டிக் பாண்ட்யா 4 விக்கெட்களையும், அர்ஷ்தீப் சிங், ஷிவம் மாவி, உம்ரன் மலிக் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகனாக ஷுப்மன் கில் தெரிவு செய்யப்பட்டார்.

தொடரின் நாயகனாக ஹார்டிக் பாண்ட்யா தெரிவு செய்யப்பட்டார்.

நியூசிலாந்தை உருட்டி எடுத்து தொடரை வென்றது இந்தியா
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version