FIFA கழக உலகக்கிண்ணம் ஆரம்பம்

பிபா கழகங்களுக்கு இடையிலான உலகக்கிண்ண போட்டிகள்(FIFA Club World Cup) நேற்று(01.02) ஆரம்பித்துள்ளது. முதற் போட்டியில் நியூசிலாந்து ஓக்லாண்ட் சிட்டி அணியை எகிப்து அணியான அல் அஹ்லி அணி 3-0 என வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது போட்டி நான்காம் திகதி நடைபெறவுள்ளது.

ரியல் மாட்ரிட், ஸ்பெயின் (Real Madrid, Spain) அல் அஹ்லி எகிப்து (Al Ahly, Egypt) அல் ஹிலால் சவுதி அரேபியா (Al Hilal, Saudi Arabia) ஓக்லான்ட் சிட்டி நியூசிலாந்து (Auckland City, New Zealand) ஃபிளமெங்கோ பிரேசில் (Flamengo, Brazil) சியாட்டில் சவுண்டர்ஸ் அமெரிக்கா ((Seattle Sounders, United States) வைடாட் ஏசி மொராக்கோ (Wydad AC, Morocco) ஆகிய அணிகள் இந்த உலக்கிண்ணத்தில் பங்குபற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளன.

2022ம் ஆண்டு இடம்பெற வேண்டிய போட்டிகள் கட்டார் உலககிண்ண போட்டிகள் காரணமாக பிற்போடப்பட்டு இவ்வருடம் இடம்பெறவுள்ளன. நடப்பு சாம்பியனான செல்சி அணி இம்முறை போட்டிகளுக்கு தகுதி பெறவில்லை எனினும் அதிக தடவை வெற்றிபெற்ற ரியல் மெட்ரிக் அணி இம்முறை போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது சிறப்பம்சமாகும்.

ஐரோப்பிய பிரீமியர் கழக போட்டிகளில் வெற்றிபெற்ற ரியல் மெட்ரிக் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. சவுத் அமெரிக்கா பிரீமியர் கழகங்களுக்கான கோப லிபெர்ட்டொரஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற பிரேசில் நாட்டின் ஃபிளமெங்கோ அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

வட அமெரிக்கா மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்திய போட்டிகளில் வெற்றிபெற்ற அமெரிக்கா நாட்டின் சியாட்டில் சவுண்டர்ஸ் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆசிய கொன்பெடரெசன் லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற சவுதி அரேபியா நாட்டின் அல் ஹிலால் அணி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆபிரிக்க கொன்பெடரெசன் லீக் போட்டிகளில் வெற்றிபெற்ற மொராக்கோ நாட்டின் வைடட் எசி அணி நேரடியாக இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. குறித்த அணி போட்டியினை நடாத்தும் நாடு என்பதனால் குறித்த தொடரின் போட்டிக்கான தகுதி அணியாக ஆபிரிக்க கொன்பெடரெசன் லீக் போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற எகிப்து நாட்டின் அல் அஹ்லி அணி முதல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ஓசானிக் கிளப் சாம்பியன் லீக் போட்டிகளில் வெற்றிபெற்ற நியூசிலாந்து நாட்டின் ஒக்லான்ட் சிட்டி முதல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. உலகின் சிறந்த கழகம் என்ற பட்டத்தினை பெற்றுக்கொள்ள ஏழு அணிகள் மோதிக்கொள்ள போகும் இத்தொடரின் முடிவில் எந்த அணி வெற்றிபெற்று உலகின் சிறந்த கழகம் என்ற பட்டத்தை தட்டிச்செல்ல போகின்றது என்பது இன்னமும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

போட்டி அட்டவணை

Wed, Feb. 1 1st Rd Al Ahly 3-0 Auckland City
Sat, Feb. 4 2nd Rd Seattle Sounders vs. Al Ahly
Sat, Feb. 4 2nd Rd Wydad Casablanca vs. Al Hilal
Tue, Feb. 7 Semi Flamengo vs. Wydad/Al Hilal
Wed, Feb. 8 Semi Seattle/Al Ahly vs. Real Madrid
Sat, Feb. 11 3rd Place Semifinal 1 loser vs. Semifinal 2 loser
Sat, Feb. 11 Final Semifinal 1 winner vs. Semifinal 2 winner

-ரவிநாத்-

FIFA கழக உலகக்கிண்ணம் ஆரம்பம்
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version