இலங்கைக்கு சீனா வழங்கும் சலுகை!

2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் இலங்கை செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டியை இடைநிறுத்தி நிவாரணம் வழங்க சீனா தீர்மானித்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, அந்த இரண்டு வருடங்களுக்கான கடனை செலுத்துவதற்கான நீண்ட கால திட்டம் நிதியமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அதன்படி, அந்தக் காலகட்டங்களில், வங்கிக் கடன்களுக்கான அசல் மற்றும் வட்டியை இலங்கை செலுத்தத் தேவையில்லை என்றும் குறுகிய கால கடனைத் திருப்பிச் செலுத்தும் அழுத்தத்திலிருந்து இலங்கை விடுபட இது உதவியாக இருக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்த காலப்பகுதியில், எக்சிம் வங்கி இலங்கையுடன் நடுத்தர மற்றும் நீண்ட கால கடன் மீள்செலுத்துகை தொடர்பாக நட்புரீதியான ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகவும், அதன் மூலம் இலங்கையின் நிலைத்தன்மைக்கு பங்களிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொலும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச நாணய நிதியத்திற்கு கடனுதவி விண்ணப்பிப்பதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக எக்ஸிம் வங்கி இணங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நிலை தொடர்பில் முழுமையான கவனம் செலுத்தி, கூடிய விரைவில் கடன் உதவிகளை வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா வலியுறுத்துவதாகவும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் நட்பு நாடாக எப்போதும் சீனா இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சீனா வழங்கும் சலுகை!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version