பிரபல பாடகி வாணி ஜெயராம் காலமானார்.

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் சுமார் ஆயிரம் படங்களில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி அனைவர் மனதிலும் இடம்பிடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே கொண்டவர்.

வாணி ஜெயராமின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பாடகி வாணி ஜெயராம் காலமானார்.
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version