ரேபிஸ் நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம்!

எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் வெறிநோய் வேகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வெறிநாய்க்கடியை ஒழிக்க ஒரு தடுப்பூசி திட்டம் செயற்படுத்தப்பட்டு வந்ததாகவும், ஆனால் துரதிஷ்டவசமாக தஇத்திட்டம் முற்றாக நிறுத்தப்பட்டதால் இந்த நோய் பரவும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்
தலைவர் திரு.உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

“கடந்த காலங்களில், இலங்கையில் வெறிநாய்க்கடியால் ஏற்படும் இறப்புகள் குறைவதற்கு, வெற்றிகரமான தடுப்பூசி திட்டம் இருந்ததே முக்கிய காரணம். துரதிஷ்டவசமாக, தற்போது தடுப்பூசி திட்டம் முற்றாக முடங்கியுள்ளது. தற்போது சுகாதாரத் துறையில் நாய்களுக்குகான வெறிநாய் தடுப்பூசிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து தடுப்பூசிகள் வழங்கப்படாததால், இத்திட்டத்தை வெற்றிகரமாக தொடர முடியவில்லை. குறிப்பாக நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றிய பிறகு வருடத்திற்கு ஒரு முறையாவது அடுத்த தடுப்பூசியை ஏற்ற வேண்டும். எனினும் இதனை தொடர முடியவில்லை.

கடந்த சில மாதங்களாக கோவிட்-19 மற்றும் எரிபொருள் பிரச்சனை மற்றும் தடுப்பூசிகளின் பற்றாக்குறை காரணமாக இந்த திட்டம் தோல்வியடைந்தது. எனவே, எதிர்காலத்தில் ரேபிஸ் நோயால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. நாய்க்கடியை முடிந்தவரை தவிர்க்குமாறு பொதுமக்களை எச்சரிக்கிறோம். மேலும், சந்தேகத்திற்கிடமான நாய் கடி ஏற்பட்டால், அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று உடனடியாக மருத்துவரை அணுகுமாரும் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ரேபிஸ் நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version