துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது 7.5 ரிக்டர் அளவுவில் பதிவாகியுள்ளதாகவும், இதுவரை சேத விபரங்கள் அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று அதிகாலை சிரிய எல்லைக்கு அருகில் தெற்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கியில் 900 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளதுடன், சிரியாவில் இதுவரையில் 400 க்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
துருக்கியில் வாழும் இலங்கையர்களில் ஒருவரே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் 9 இலங்கையர்கள் வசித்ததாகவும் அவர்களில் 8 பேரை இதுவரை தொடர்பு கொள்ள முடிந்ததாகவும், ஒருவரை மட்டும் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி உருகொடவத்த தெரிவித்துள்ளார்.