தேர்தல்கள் ஆணைக்குழு, நிதியமைச்சிடம் தேர்தல் ஆரம்ப செலவினங்களுக்காக 770 மில்லியன் ரூபா பணத்தினை கோரியுள்ளதாகவும், இதுவரையில் அதற்கான பதிலை நிதியமைச்சு வழங்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், நிமல் புஞ்சிஹேவா இந்த மாத ஆரம்பத்தில் குறித்த பண தொகைக்கான கோரிக்கையினை முன்வைத்திருந்ததுடன், அது தொடர்பில் நிதியமைச்சின் செயலாளரிடம் இந்த தொகையினை தவணையடிப்படையில் வழங்குமாறும் கோரியுள்ளார்.
மக்களின் அடிப்படை தேவைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும் எனவும், பணம் இருக்கும் போது தேர்தல் செலவினங்களுக்கு வழங்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இராஜாங்க அமைச்சர்கள் இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் அலுவலக உத்தியோகஸ்தர் ஒருவரை மேற்கோள் காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
40 மில்லியன் ரூபா இந்த மாத ஆரம்ப பகுதியில் தேர்தல் செலவுகளுக்காக வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்திருந்தது.