ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று (08.02) ஆரம்பமாகவுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமர்வை ஆரம்பித்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 27ம் திகதி முடிவடைந்தது.

இன்றைய அமர்வில் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதுடன், அவரது உரையின் பின்னர் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய நான்காவது அமர்வில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தி கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் பணத்தை வீணாக செலவழித்து விழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply