குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநாகல் ஏரி சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது மாத ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
யந்தம்பலாவையிலிருந்து பமுனுகெதர நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தொலைபேசி கோபுரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் நான்கு பயணிகளும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த சிசு உயிரிழந்துள்ளது.
