பெப்ரவரி முதல் வாரத்தில் 25,000 சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பெப்ரவரி 1-7 வரையான காலப்பகுதியில், மொத்தமாக 26,506 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
2022ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 18 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ரஷ்யா, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து அதிகமானோர் வருகை தந்திருப்பதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான பல திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும், அதன் மூலம் இந்தியர்களின் இலங்கை வருகையை அதிகரிக்க முடியும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாடோ தெரிவித்துள்ளார்.