ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக A.H.M. பெளசி இன்று(09.02) பாராளுமன்றத்தில் பதவியேற்றார். முஜிபுர் ரஹ்மான் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை மேயர் பதவிக்கு போட்டியிடுவதனால் பாரளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்தார். அவரின் இடத்துக்கு பெளசி பாராளுமன்ற உறுப்பினராக ஐக்கிய மக்கள் சக்தியினால் நியமிக்கப்பட்டார்.
நேற்று பாராளுமன்றம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிராமணம் செய்து கொண்டார்.
86 வயதில் இந்த பதவியினை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். இவர் ஏற்கவனே பல தடவைகள் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டு, அமைச்சு பதவிகளையும் வகித்துள்ளார்.