உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களை, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 11 ஆம் திகதி சமூகமளிக்குமாறு அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா அறிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் பணிகள் தொடர்பிலும் ஆரம்ப நடவடிக்கைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கும் முகமாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆரம்ப செலவினங்களுக்கா தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரப்பட்ட 770 மில்லியன் ரூபா பணம் வழங்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் நிதியமைச்சு இன்னமும் பதில் வழங்கவில்லை. அத்தோடு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பணத்தினை வழங்குமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் தொடர்ந்தும் நிலவி வரும் நிலையில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.