பலி எண்ணிக்கை 15,000ஐ கடந்தது!

துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் 15,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில், துருக்கியில் 12,391 இறப்புகளும், சிரியாவில் 2,992 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதுடன் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டு 3 நாட்கள் கடந்துள்ள நிலையில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் இருப்பதால் அதிகமானோர் காப்பாற்றப்படுவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடுமையான குளிர் காரணமாக நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்கள் அவதியுறுவதாக உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பலி எண்ணிக்கை 15,000ஐ கடந்தது!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply