மாஃபியாவை நிறுத்தி கோதுமை மாவின் விலையை குறைத்திடுங்கள்!

கோதுமை மாவின் விலையை மக்களுக்கு ஏற்ற அளவில் குறைத்து, அனாவசியமான மாஃபியாவை தடுத்து நிறுத்துவதற்கு பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக தலையிட வேண்டும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் சில்லறை விலை 240 ரூபாவாக அதிகரித்துள்ளதாக AICOA தலைவர் அசேல சம்பத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தெரிவிக்கையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 193 ரூபாவாக இருந்தது, நாட்டின் வறிய மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு கோதுமை மாவு பிரதான உணவாக மாறியுள்ளது, எனவே, நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) மற்றும் வர்த்தக அமைச்சு இதில் தலையிட்டு கோதுமை மாவின் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதான கோதுமை மா இறக்குமதியாளர்களிடம் இந்த மாஃபியாவை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரித்த போதிலும், சிற்றுண்டி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை என்பதையும் சங்கம் சுட்டிக்காட்டியது.

மாஃபியாவை நிறுத்தி கோதுமை மாவின் விலையை குறைத்திடுங்கள்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply