வங்கி அட்டைகளை மிகவும் அவதானமாக பாவிக்குமாறு இலங்கை மத்திய வங்கி பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் நிலைகள் காரணமாக வங்கி அட்டைகளை திருடுவதற்காக வாய்ப்புகள் அல்லது முறைகேடாக பாவிக்கும் வாய்ப்புகள் காணப்படுவதாக மேலும் அறிவித்துள்ளது.
வங்கி கணக்கு விபரங்கள், பாவனை பெயர், ரகசிய குறியீட்டு இலக்கங்கள், வங்கி அட்டை இரகசிய இலக்கம், OTP இலக்கம், CVV இலக்கம் அடங்கலாக எந்த விபரங்களையும் மூன்றாம் நபர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாமென மேலும் அறிவுறுத்தியுள்ளது.