டினேஷ் சாப்டரின் பிரேத பரிசோதனையில் முரண்பாடு

அண்மையில் பொரளை கனத்தை பொது மயானத்தில் மர்மான முறையில் இறந்த தொழிலதிபர் டினேஷ் சாப்டரரின் மரணத்தில் பலவிதமான யூகங்கள் வெளிவந்தன. கொலை, தற்கொலை என இரண்டு விதமான ஊகங்களும் வெளிவந்த நிலையில் பொலிஸ் விசாரணை தொடர்பிலான விடயங்களை வெளியிடுவதனை தவிர்த்து வந்தது.

உடற் கூற்று பரிசோதனையில் முரண்பாடுகளும், தொடர்பற்ற நிலைமையும் காணப்படுவதாக டினேஷ் சாப்டர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததாக பரிசோதனை முடிவுகள் தெரிவித்திருந்ததாகவும், ஆனால் இறுதி பரிசோதனை முடிவில் சைனட் அருந்தியதனால் இறப்பு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரட்ன நீதிமன்றத்துக்கு தெரிவித்தார்.

இந்த விடயங்களை கேட்டறிந்த நீதிபதி டினேஷ் சாப்டரின் இறப்பு தொடர்பிலான இறுதி தீர்ப்பு மார்ச் மாதம் 08 ஆம் திகதி வழங்கப்படுமென நீதிபதி மேலும் தெரிவித்தார்.

அண்மையில் டினேஷ் சாப்டரின் தகப்பன் சந்த்ரா சாப்டர் தனது மகன் இறந்த தினத்தன்று குடும்பத்தோடு இங்கிலாந்து பயணமாக இருந்ததாகவும், அவர் மிகவும் சந்தோசமாகவும், குழப்பங்கள் எதுவுமின்றி இருந்ததாகவும் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.

“இறந்த தினத்தன்று ஒரு சிறிய வேலை இருப்பதாகவும், அதனை முடித்து விட்டு வீடு திரும்புவதாகவும் கூறியிருந்தார். தனது பிள்ளைகளை இங்கிலாந்தில் கல்வி நடவடிக்கைகளுக்காக அழைத்து செல்வதற்காகவே அவர் இங்கிலாந்து பயணிக்க இருந்தார்” எனவும், சந்திரா சாப்டரர் தெரிவித்திருந்தார்.

டினேஷ் சாப்டரின் பிரேத பரிசோதனையில் முரண்பாடு
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply