தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிப் போரில் கொள்ளப்பட்டது உறுதி என இராணுவம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக இந்தியா தஞ்சாவூரில் பழ நெடுமாறன் ” பிரபாகரன் நன்றாக உள்ளார். அவரின் குடும்ப உறவுகள் தன்னுடன் தொடர்பில் உள்ளார்கள். உரிய நேரத்தில் அவர் வெளியே வருவார்” என கூறியமை தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை என இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி நந்தி கடலில் இறந்த நிலையில் பிரபாகரனின் உடல் கிடைத்தாகவும் அதனை கருணா, தயா மாஸ்டர் போன்றவர்கள் உறுதி செய்ததாகவும், DNA பரிசோதனைகள் அதனை உறுதி செய்ததாகவும் இராணவ பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.