மேற்கு ஆப்பிரிக்காவில் மார்பர்க் என்னும் புதிய வகை தொற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. எபோலா, கோவிட் – 19 போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளவால்களிலிருந்து பரவுவதாக நம்பப்படும் இந்த மார்பர்க் வைரஸ் தொற்றுநோய், 88 சதவிகிதம் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் அளவு வீரியம் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரத்தப்போக்குடன் கூடிய கடுமையான காய்ச்சல், செயல்திறன் குறைபாடு, உடல் உறுப்புகள் உளைச்சல் போன்ற நோய் அறிகுறிகளை கொண்டுள்ளது. உலகளவில் இதுவரை 16 பேர் இந்த நோய் அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் பரவலைத் தடுக்க சுமார் 200 பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், தொற்று ஏற்பட்டு உயிரிழந்த 9 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு மார்பர்க் கிருமியின் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மார்பர்க் வைரஸ் தொற்றுக்கு இதுவரை எந்தவித சிகிச்சையோ அலலது தடுப்பூசியோ கண்டுபிடிக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
