மொராக்கோவில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் அல்-ஹிலாலை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சர்வதேச காரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உலகக் கோப்பையை ரியல் மாட்ரிட் வென்றது.
அரையிறுதியில் எகிப்தின் அல் அஹ்லியை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்த ஐரோப்பிய சம்பியன்கள், கடந்த சீசனின் சவுதி புரோ லீக் வெற்றியாளர்களான அல்-ஹிலாலை 5-3 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியின் வினிசியஸ் ஜூனியர் மற்றும் ஃபெடரிகோ வால்வெர்டே தலா இரண்டு கோல்கள் அடித்தனர். கரீம் பென்சிமா ஒரு கோலை அடித்தார்.
அல்-ஹிலாலி அணியின் இரண்டு கோல்களை லூசியானோ வியட்டோவினாலும் ஒரு கோல் மௌஸா மரேகாவும் அடித்தார்.
இறுதி போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 17 உதைகளையும் அல்-ஹிலாலி அணி 09 உதைகளையும் மேற்கொண்டன. அவற்றுள் ரியல் மாட்ரிட் அணி 11 கோல் உதைகளை மேற்கொண்ட அதேவேளை 67% பந்தினை கட்டுப்பாட்டினுள் வைத்து விளையாடியிருந்தது. அல்-ஹிலாலி அணி 03 கோல் உதைகளை மேற்கொண்ட அதேவேளை 33% பந்து கட்டுப்பாட்டினை கொண்டிருந்தார்கள்.
ரியல் மாட்ரிட் அணி 10 தண்டங்களையும் அல்-ஹிலாலி அணி 8 தண்டங்களையும் மேற்கொண்டன. இரு அணிகளும் போட்டியின் போது எவ்வித அட்டைகளையும் பெற்றுகொள்ளாமல் சிறப்பாக விளையாடியது. இரு அணிகளும் தலா ஒவ்வொரு Offsides இனை பெற்றுக்கொண்டன.
டோனி குரூஸ் ரியல் மாட்ரிட் அணிக்காக 74 நிமிடங்கள் விளையாடியிருந்தார். Club உலகக் கோப்பையை ஆறு முறை வென்ற முதல் வீரர் என்ற புதிய சாதனையும் படைத்தார்.
லூகா மோட்ரிச், நாச்சோ பெர்னாண்டஸ், டேனியல் கார்வஜல் மற்றும் கரீம் பென்சிமா ஆகியோர் ஐந்து உலககோப்பையினை வெற்றி பெற்றுள்ளனர்.
2009, 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பார்சிலோனாவை உலகளாவிய பெருமைக்கு இட்டுச் சென்ற பெப் கார்டியோலாவின் சாதனையை சமன் செய்து, மூன்று முறை கிளப் உலகக் கோப்பையை வென்ற இரண்டாவது முகாமையாளர் என்ற பெருமையை ரியல் பாஸ் கார்லோ அன்செலோட்டி பெற்றுள்ளார்.
இறுதி போட்டியின் நாயகனாகவும், தங்க பந்து விருதினையும் ரியல் மாட்ரிட் அணியின் வினிசியஸ் ஜூனியர் பெற்றுக்கொண்டார். வெளிப்பந்து விருதினை பெதெரிக்கோ வாழ்வேர்ட பெற்றுக்கொண்டார். வெண்கல பந்து விருதினை லூஸினோ விட்டோ பெற்றுக்கொண்டார். FIFA Fair Play Trophy யினை ரியல் மாட்ரிட் அணி பெற்றுக்கொண்டது.
-ரவிநாத்-