வாக்குச்சீட்டு அச்சிடல் தடுக்கப்பட ஜனாதிபதியே காரணமென குற்றச்சாட்டு

அரசாங்க அச்சக திணைக்களம், உள்ளூராட்சி திணைக்கள தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளை நிறுத்தியமைக்கு ஜனாதிபதியே காரணமென தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி குற்றம் சுமத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்க அச்சக திணைக்களத்தை அழைத்து விசாரிக்க வேண்டுமென மேலும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி அரசாங்க அச்சக திணைக்களத்தினரை, ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து பேசியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. இது அவர்கள் மீதான அழுத்தமாகும். அரசாங்க அச்சக திணைக்களம் மக்களின் பணத்தில் இயங்குவதனால் மக்களுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டுமெனவும், யாருடைய அழுத்தங்களுக்கும் உட்படாமல் செயற்படவேண்டுமென தாம் கோரிக்கை முன்வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தலுக்கான அநேகமான ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. வாக்குசீட்டு அச்சிடும் பணிகளை நிறுத்த வேண்டிய தேவையில்லை. சாதரணமான அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறான நிலையில் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளை நிறுத்த எந்த காரணங்களுமில்லை என கருத்து கூறியுள்ள ஹந்துநெத்தி, தேர்தல் திணைக்களத்தின் தேவைகளை பூர்த்தி செய்வது அவர்களின் கடமையாகும் என கூறியுள்ளதோடு, அதனை மீறுவது தண்டனைக்குரிய குற்றமெனவும் கூறியுள்ளார்.

வாக்குச்சீட்டு அச்சிடல் தடுக்கப்பட ஜனாதிபதியே காரணமென குற்றச்சாட்டு
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply