இந்தியா கிரிக்கட் அணியின் முதலிடம் தவறான செய்தி

இந்தியா டெஸ்ட் கிரிக்கட் அணி அவுஸ்திரேலியா அணியினை வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் தரப்படுத்தல்களில் முதலிடத்தை பெற்றுக் கொண்டதாக இந்திய ஊடகங்கள் மற்றும் கிரிக்கெட்டின் பிரபல ஊடகமான கிரிக்இன்போ இணையத்திலும் வெளியாகியுள்ள செய்திகள் பிழையானவை. ஜனவரி மாதம் 15 ஆம் திகதியின் தரப்படுத்தல்களின் படி அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரப்படுத்தல் பக்கத்தில் அவுஸ்திரேலியா அணி 126 புள்ளிகளோடு முதலிடத்திலும், இந்தியா அணி 115 புள்ளிகளோடு இரண்டாம் இடத்திலும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடத்தை பெற்றுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ள ஊடகங்கள் இந்தியா அணி 115 புள்ளிகளையும், அவுஸ்திரேலியா அணி 111 புள்ளிகளையும் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

கிரிக்இன்போ இணையத்தில் இந்த தரப்படுத்தல் புள்ளிகள் ஜனவரி 15 ஆம் திகதிக்கான தரப்படுத்தலாக வெளியிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான தொடர் ஆரம்பிக்கும் நிலையில் 11 புள்ளிகள் வித்தியாசம் காணப்படும் நிலையில் இந்தியா அணி ஒரே வெற்றியில் முதலிடத்தை பெறுவது சாத்தியமற்றது.

இந்தியா அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றாலே முதலிடத்தை பெற்றுக்கொள்ளும். இவ்வாறான நிலையில் வெளியாகியுள்ள செய்தி மற்றும் தரப்படுத்தல் பட்டியலில் தவறானது.

அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா அணி மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடத்தை பெற்ற அணியாக மாறும்.

இவ்வாறான சாதனையினை தென்னாபிரிக்கா அணி 2014 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டுள்ளது.

வெளியாகியுள்ள தரப்படுத்தல் பட்டியல் விபரங்கள் கீழுள்ளன.

ச.விமல்
பணிப்பாளர்
வி மீடியா

இந்தியா கிரிக்கட் அணியின் முதலிடம் தவறான செய்தி
இந்தியா கிரிக்கட் அணியின் முதலிடம் தவறான செய்தி
இந்தியா கிரிக்கட் அணியின் முதலிடம் தவறான செய்தி
இந்தியா கிரிக்கட் அணியின் முதலிடம் தவறான செய்தி
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply